சினேகா, கிஷோர் இணைந்து நடித்துள்ள ஹரிதாஸ் படத்தின் பாடல்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. இதன் பின்னர் படக்குழுவினர் நிருபர்கள் சந்திப்பும் இடம் பெற்றது
அப்போது சினேகா கூறுகையில், நான் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். ஆனாலும் திருப்தியான கதாபாத்திரம் பண்ணவில்லை என்ற குறை இருந்தது.அப்போதுதான் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் என்னை அணுகி கதை சொன்னார்.நான் எதிர்பார்த்த மாதிரி கதாபாத்திரம் இருந்தது. ஆனால் அந்த நேரம் எனக்கு திருமணம் முடிவாகி இருந்தது.திருமணத்துக்கு பின்பு நடிகைகளை வேறு மாதிரி பார்ப்பார்கள். திருமணத்துக்கு பின் கதாநாயகிகள் நடிக்கக்கூடாது என்ற நிலைமைதான் உள்ளது.
எனினும், திருமணம் ஆகப்போவது பற்றி இயக்குனரிடம் சொன்ன பின்பும் பரவாயில்லை. நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றார்.என் மீது நம்பிக்கை வைத்து இதில் நடிக்க வைத்துள்ளார். கிஷோர் பார்க்க சாதாரணமா இருப்பார். ஆனால் படப்பிடிப்பில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வார்.
நிறைகுடம் தழும்பாது என்பதை அவரிடம் பார்க்க முடியும். திறமையானவர்கள் இந்த படத்தில் உள்ளனர் என்றும் பாடல்கள் நன்றாக உள்ளன எனவும் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக