புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்பிரிக்க நாடான நைஜீரியா எண்ணை வளம் மிகுந்தது. இங்கு வாழும் மக்களில் கிறிஸ்தவர்கள் பாதி அளவு உள்ளனர். இவர்களுக்கு எதிராக போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர்
செயல்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் கிறிஸ்தவர்கள் நேற்று மீண்டும் தாக்கப்பட்டனர். மைதுகுரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் முசாரி இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்கியுள்ளனர். அங்கு புகுந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் சிலரை இழுத்து வந்து அவர்களின் குரல்வளையை கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினெனட் கர்னல் சகிர்மூசா தெரிவித்தார். ஆனால் 15 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டதாக கிராம மக்கள் கூறினர். இந்த சம்பவம் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பொடிஸ்கும் நகரில் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். 51 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.
 
Top