புற்றுநோயினால் பாதிக்கபட்ட பெண்ணுக்கு புதுவிதமான முறையில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது..இங்கிலாந்தின் லிவர்பூல் என்ற இடத்தை சேர்ந்த மிச்செலி மோர்கன்(வயது 40)
என்பவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டார்.
சோதனை நடத்தியதில் கல்லீரலில் பெரும்பகுதி பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அறுவைசிகிச்சை மூலம் கட்டி முழுவதையும் அகற்றப்பட்டது.
இந்த அகற்றப்பட்ட பகுதியில், ரத்த குழாய்களை சீரமைக்க பசுவின் இருதய திசுக்களை பயன்படுத்த முடிவு செய்தனர், வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.
அறுவைசிகிச்சை நடந்த 11 நாளைக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும், 10 வருடத்திற்கு நோயின் தாக்கம் இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.