மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் வயிற்றில் இருந்து 1.6 கிலோ முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம்
அகற்றியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்தவர் சியா ஷிண்டே(15). ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ட்ரைகாட்டிலோமேனியா என்ற குறைபாடுடன் ட்ரைகோபெசோர் என்று குறைபாடும் இருந்ததுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தங்கள் முடியைப் பிய்த்து சாப்பிட வேண்டும் போல் இருக்கும். இந்நிலையில் சியா 10 வயதில் இருந்தே தனது முடியைப் பிய்த்து சாப்பிட்டு வந்துள்ளார். இதை அவர் 5ம் வகுப்பு படிக்கையில் தான் அவரது தந்தை பார்த்துள்ளார்.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், எனது மனைவி சியாவின் வாயில் இருந்து ஒரு முடி உருண்டையை வெளியே எடுத்துள்ளார். மேலும் இனிமேல் முடியை சாப்பிடக்கூடாது என்றும் கண்டித்தார் என்றார்.
ஆண்டுக் கணக்கில் அவர் முடியை சாப்பிட அது அவரது வயிற்றில் சேர ஆரம்பித்தது. இறுதியில் வயிற்றில் உணவு செரிக்கக்கூட இடமில்லாமல் முடி நிறைந்தது. இந்நிலையில் சியா தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிடி ஸ்கேன் எடுத்தபோது சியாவின் வயிற்றில் முடி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து 1.6 கிலோ முடியை மருத்துவர்கள் அகற்றினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக