புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் வயிற்றிலிருந்து, பெண்ணுறுப்பு வரை வெட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அப் பெண் குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸாருக்கு அடையாளங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top