புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு "ஒரு குழந்தை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் படி நகர்புறங்களில் இருக்கும் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு.

இதனை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி ஷிஜியாங் பகுதி தம்பதியினரிடம் மூன்றாவது குழந்தை பெற்றதற்காக அபராத தொகை கேட்டு சீன மக்கள் தொகை கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பெற்றோர் கையில் இருந்து தவறி விழுந்த, 13 மாத ஆண் குழந்தை மீது அதிகாரிகள் வந்த வாகனம் ஏறியது. இந்த விபத்தில் குழந்தை பரிதாபமாக மரணமடைந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top