12 வயது பள்ளிச் சிறுமி இரட்டை குழந்தைகள் பெற்றாள். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11-வது வயதில் தகாத உறவால் கர்ப்பம்
அடைந்தாள்.
இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள். ஆனால் அவளது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமி கர்ப்பமாகி இருப்பதை கண்டுபிடித்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது 12-வது பிறந்த நாளை அச்சிறுமி கொண்டாடினாள். பின்னர் சில நாட்களில் அவள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இத்தகவலை அர்ஜென்டினா பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. மேலும் அதில், அந்த சிறுமியின் சித்தி கடந்த 3 மாத ங்களுக்கு முன்பு தனது 14-வது வயதில் குழந்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக