பப்புவபா நியூ கினியா நாட்டில் உள்ள போர்ட் மோர்ஸ் நகரத்தில் கெபாரி லேனியாட்டா என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவரை சூனியக்காரி என்று சந்தேகித்த மக்கள் அவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். 20 வயதான அந்தப் பெண் ஒரு
குழந்தைக்கு தாயாவார்.
அப்பகுதியைச் சேர்ந்த6 வயதுச் சிறுவன் ஒருவன் சமீபத்தில் மருத்துவமனையில் இறந்துள்ளான். லேனியாட்டா சூனியம் வைத்ததுதான் சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்று அந்தச் சிறுவனின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அந்தப் பெண்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். சூடான இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கார் டயர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளால் மூடி எரித்துக் கொன்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் படங்கள் அந்நாட்டின் முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளன. இது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலைக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக