அரசு மருத்துவமனையில் பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தையிடம், பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ள சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில், தெருவோர வியாபாரியின் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது.
பெண்குழந்தையின் மர்ம உறுப்பில், காயங்கள் இருந்ததையடுத்து, அது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் பொலிசிற்கு குழந்தையின் தாயார் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரை ஏற்க மறுத்த பொலிசார், எலி கடித்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். பின் குழந்தையிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தலின் பேரில் இது நடைபெற்றுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.
பொலிசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து, குழந்தையை கையாண்டவர்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக