திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் இல்லத்தில் நடைபெற்ற
திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை,
சம்பவத்தை அடுத்து சென்னை திரும்பிய அவர் மீது விமான நிலையத்தில் வைத்து செருப்பு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சென்னை, சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள குஷ்புவின் வீட்டின் மீதும் சுமார் 50 பேர் அடங்கிய குழுவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது குஷ்புவின் இரு மகள்களும் மாத்திரமே வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்.மு.க.வின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை குஷ்பு. இந்த பேட்டி இன்று வெளியான நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து குஷ்பு கூறுகையில்,
'திருச்சியில் திருமண மண்டபத்திலேயே என்னை சிலர் தாக்கினர். விமான நிலையத்திலும் செருப்பு போன்றவற்றை வீசி தாக்கினர். இது தவறான செயல். நான் சொல்லாத ஒன்றுக்காக தாக்கப்பட்டுள்ளேன.
மேலும் தமது வீடு தாக்கப்பட்டது குறித்து எனது தலைவர் கருணாநிதி விசாரணை நடத்தி வருகிறார்.
நான் கட்சிக்கு வரும்போது என் வழி தலைவர் வழி என்றுதான் சொன்னேன். அதைத்தான் இப்பவும் சொல்றேன். அதைத்தான் பேட்டியிலும் சொன்னேன். என் வீட்டில் தலைவர் படமும் தளபதி படமும்தான் மாட்டி வைத்திருக்கிறேன்' என்றார் அவர்.
0 கருத்து:
கருத்துரையிடுக