கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் இரு இந்திய பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.
அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று மாந்தீரிகம் மற்றும் ஜோதிடம் பார்த்து மக்களிடம் பணத்தை திரட்டியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சுற்றுலா பயண அனுமதியில் இலங்கை சென்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து செப்பு தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இந்தியாவின் பெங்களுர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக