40 வருடத்திற்கு முன் 1972-ம் ஆண்டு ஏப்ரல் 23-ல் 'அப்போலோ 16' விண்கலம் அனுப்பப்பட்டது. இதில் பயணம் செய்த விண்வெளி வீரர் சார்லஸ் டியூக் அவருடைய குடும்பப் படத்தை நிலவில் வைத்து
விட்டு வந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை லண்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. டியூக், அவரது மனைவி, அவருடைய மகன்கள் இருவர் ஆகியோர் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை அவர் கால் பதிந்த இடத்திற்கு அருகே வைத்து விட்டு வந்துள்ளார்.
புகைப்படத்தின் பின்புறம் 'இது பூமியிலிருந்து வந்த விண்வெளி வீரர் சார்லஸ் டியூக்கின் குடும்பம். ஏப்ரல் 1972-ல் நிலவில் இறங்கினர்' என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 1972-ல் அமெரிக்க விமானப்படையின் 25-ம் ஆண்டு கொண்டாட்டம் நினைவாக வழங்கப்பட்ட மெடலையும் வைத்துவிட்டு வந்துள்ளார்.
1972-ல் சார்லஸ் டியூக் தனது 36-வது வயதில் நிலவில் தடம் பதித்தார். இவரே மிகக் குறைந்த வயதில் நிலவில் கால் வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நீல் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 1969-ம் வருடம் 'அப்போலோ 11' என்கிற விண்கலத்தில் பயணம் செய்து நிலவில் கால் பதித்தது அனைவரும் அறிந்த ஒன்று.
0 கருத்து:
கருத்துரையிடுக