புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிகாரிபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி தேவி. லட்சுமி தேவியின் தந்தை சைலேஷ். அதே ஊரைச் சேர்ந்த மல்லூர்
என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவர் திரும்பி கொடுத்துவிட்ட பிறகும் அதற்கான கடன் பத்திரத்தை மல்லூர் திரும்பி கொடுக்கவில்லை.

இதனை கேட்ட சைலேஷை மல்லூர் தாக்கினார். இதுகுறித்து போலீசில் புகார் செய்ய லட்சுமி தேவி தனது கணவர் ரமேசுடன் புறப்பட்டார். இதனால் ஆவேசம் அடைந்த மல்லூர், லட்சுமி தேவியை அடித்தார். அதோடு அவரது கணவர் கைகளை கட்டிப்போட்டு அவர் முன்னிலையில் லட்சுமி தேவி புடவையை அவிழ்த்து நிர்வாணமாக்கினார்.

பின்னர் நடுத்தெடுவில் பலர் முன்னிலையில் ஓடஓட விரட்டினர். சில அடி தூரம் ஓடிய லட்சுமி ஒரு வீட்டினுள் தஞ்சம் புகுந்து ஆடைகளை அணிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் ராயச்சோட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி தேவியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த மல்லூர், அவரது கூட்டாளிகள் பீம்சா, லட்சுமிபதி, லட்சுமண், சைபால் ஆகிய 5 பேரை கைது செய்தனர். காயம் அடைந்த லட்சுமி தேவி, அவரது கணவர் ரமேஷ் மற்றும் தந்தை சைலேஷ் ஆகியோர் ராயச்சோட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top