புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெளிநாடு சென்ற மனைவி பற்றிய தகவல் இல்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளை, தந்தையொருவர் துறவறத்தில் ஈடுபடுத்தியுள்ளார். பொலனறுவை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற 53 வயதான தமிழரே இவ்வாறு தனது நான்கு பிள்ளைகளையும் பௌத்த துறவறத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

38 வயதான கந்தன்குட்டி கமலபூரணி என்ற அவரது மனைவி ஓராண்டுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.

காணியொன்றை ஒரு லட்ச ரூபாவிற்கு அடகு வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு பணம் அனுப்பி வழங்கியுள்ளார்.

பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை, மனைவி பற்றிய தகவல்களும் இல்லை என்ற காரணத்தினால் மனமுடைந்த அவர், பிள்ளைகளை துறவறத்தில் ஈடுபடுத்த தீர்மானித்தார்.


தமிழரான குறித்த நபர், தனது நான்கு பிள்ளைகளையும் பௌத்த துறவறத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வந்த சிலர் பிள்ளைகளை ஒரு லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு கோரியதாக சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை திம்புலாகல விஹாரைக்கு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் துறவறத்திற்காக ஒப்புக் கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண் பிள்ளைகள் ஏற்கனவே இளம் பயிலுனர் பௌத்த பிக்குகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

பெண் பிள்ளை பொலனறுவை பௌத்த பிக்குனிகள் மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top