நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றும் பட்டதாரி இளைஞர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அவரது நண்பர், ‘நீங்கள் நடித்த படுக்கை அறை காட்சிகளை சில
தினங்களுக்கு முன்னர் இன்டர் நெட்டில் பார்த்தேன். சூப்பர்….’ என்று கூறினார். திகைத்துப் போன அந்த இளைஞர் ‘நான் அப்படி எந்த காட்சிகளிலும் நடிக்கவில்லையே…’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அந்த காட்சிகள் வெளியானதாக கூறப்படும் இணைய தளத்தின் முகவரியை நண்பரின் மூலமாக கேட்டறிந்து, அதைப் பார்த்த இளைஞர் பதறிப் போனார். மனைவியுடன் அவர் படுக்கையறையில் இருந்த அந்தரங்க காட்சிகள், முழு நீள நீலப்படமாக அந்த இணைய தளத்தில் வெளியாகி உள்ள தகவலை நொய்டா சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன? என்று போலீசார் அந்த இளைஞரிடம் கேட்டனர். ‘சில மாதங்களுக்கு முன்னர், மதுரா, ஜெய்பூர் ஆகிய நகரங்களை சுற்றிப் பார்க்க மனைவியுடன் நான் சென்றிருந்தேன். மதுராவில் உள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கியிருந்த போதுதான், இந்த காட்சிகள் ரகசிய கேமரா மூலம் படமாக்கப்பட்டிருக்கக் கூடும்’ என்று அவர் பதில் அளித்தார்.
இதனையடுத்து, அந்த லாட்ஜை போலீசார் சோதனையிட்ட போது, பல அறைகளில் கட்டிலுக்கு அருகே ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபாச காட்சிகளை வெளியிடும் 12 கட்டண இணைய தளங்களுடன் கூட்டாளியான அந்த லாட்ஜின் உரிமையாளர், இளம் தம்பதிகளை ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் தங்க வைத்து இதைப் போன்ற படங்களை தயாரித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக இதுவரை 2 இணைய தள உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேச அளவில் இணையதள தொழிலில் ஈடுபட்டுள்ள மேலும் பலரை கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக