புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம்; அதை பின்பற்ற வேண்டாம். காதலர் தினம், கற்பழிப்பில் தான் போய் முடியும்' என, "இந்து ஜனஜாக்ருதி சமதி' என்ற, அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


உலகம் முழுவதும், நாளை, காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலிப்பவர்கள், இந்த நாளை, விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்த நாளுக்கு, சில, மத பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்."இந்து ஜனஜாக்ருதி சமதி' என்ற அமைப்பின், கோவா மாநில தலைவர், மனோஜ் சோலங்கி நேற்று முன்தினம், பனாஜி நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம்; அதை இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேண்டாம் என, கேட்டு கொள்கிறோம். காதலர் தினத்தன்று, ஆணுறை விற்பனை அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காதலர் தினத்தில் ஈடுபடுபவர்கள், கற்பழிப்பு வரை செல்லும் ஆபத்து உள்ளது.எனவே, "காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம்' என, பிப்., 14ல், பள்ளி, கல்லூரி, மக்கள் கூடும் இடங்களில், நாங்கள் பிரசாரம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, காதலர் தின ஆதரவாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதா? மேற்கத்திய பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள், காதலர் தினத்தை பின்பற்றினால் தப்பா?' என, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top