சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
அடைந்துள்ளார்.யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.
தன்னை கணவர் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து செல்வார் என காத்திருந்த இவருக்கு தனது கணவர் சுவிட்சர்லாந்தில் வெள்ளை இனத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து வாழ்ந்து வரும் செய்தி பின்னரே தெரிய வந்திருக்கின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இவர், எனினும் தனது கணவர் எப்படியாவது தன்னை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் கணவனின் குடும்பத்தாருடன் திருச்சில் வாழ்ந்துள்ளார்.
பல வருடம் கழிந்தும் தன்னை கணவன் அழைக்காததால் மனம் உடைந்த அவர் எப்படியோ சுற்றுலா விசாவில் ஒருதடவை சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அங்கு கணவனால் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் விசா முடிவடைந்து மீண்டும் இந்தியா திரும்பி சென்று கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்தவர் கடந்த 3ம் திகதி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார்.
இவ் மரணம் தொடர்பாக கணவனின் குடும்பத்தாரால் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் எனவும் நஞ்சு அருந்தினார் எனவும் இவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் எனவும் இந்நிலையில் வாந்தி எடுத்த போது ஏற்பட்ட விக்கலினாலேயே இறந்தார் எனவும் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கபடுகின்றன.இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் திருச்சி பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக