புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சகோதரரின் மனைவியை பழிவாங்க அவரது 18 மாத குழந்தையை சாக்கடையில் வீசிக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு டெல்லியில் உள்ள ஜகத்பூரியில்செல்போன் கடை
வைத்திருப்பவர் சர்தஜ். அவர் குரேஜி பகுதியில் வசித்து வருகிறார்.

அவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஜனவரி 23ம் தேதி என் தாய் எனது 18 மாத மகன் ஜயிதை பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றார்.

அதன் பிறகு எனது தந்தை போன் செய்து குழந்தையை எனது சகோதரர் முகமது ஆபித் கொண்டு வந்து கொடுத்தாரா என்று கேட்டார். ஆனால் குழந்தையை ஆபித் இங்கு கொண்டு வரவில்லை மாறாக கடத்திச் சென்றார் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 28ம் தேதி ஆபிதை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபித் கூறுகையில், சகோதரரின் மனைவி என்னைப் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

அவரை பழிவாங்கவே குழந்தை ஜயிதை காசிபூரில் உள்ள சாக்கடையில் வீசிக் கொன்றேன் என்றார். போலீசார் அவரை காசிபூர் அழைத்துச் சென்றபோது குழந்தையை வீசிய இடத்தை அவர் அடையாளம் காட்டினார். ஆனால் இதுவரை குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top