புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒடிசா மாநிலத்தில் மூன்று பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற மூன்று கிராமவாசிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க கோரி ‌போராட்டம் நடைபெற்று வரும் இவ்வேளையில் ஒடிசாவிலுள்ள அம்பபாதா என்ற கிராமத்தில் இந்த சோக சம்பவம் ‌நடைபெற்றுள்ளது.

மூன்று பெண்களும் மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபட்டு சூன்யம் செய்வதாக கூறி கிராமத்தினர் சிலர் அந்த பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.

பெண்களின் வீட்டுக்குள் புகுந்து அவர்களை வெளியில் இழுத்து வந்த கிராமத்தினர் அவர்களது முகத்தில் கரியை பூசியுள்ளனர்.

பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி கிராம சாலைகளில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகலவறிந்த பொலிசார் பெண்களை காப்பாற்றி, சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top