புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், 9 வயது சிறுவனை கோடாரியால் மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளது. இதனால் அங்கு வசிக்கும்
இந்தியர்கள் பீதியில் உள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்டின் பிர்மிங்காம் நகரத்தில், கிரேட்பார் பகுதியில் வசிப்பவர் ராஜிந்தர் ஆலுக் (40). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி பல்ஜித். இவர்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் ஜே (16). 2வது மகனுக்கு 9 வயதாகிறது. கடந்த திங்கட்கிழமை இரவு ராஜிந்தர் வீட்டு கதவை உடைத்து கொண்டு மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்தது.

அவர்களிடம் கோடாரி, கடப்பாரை, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. வீட்டில் இருந்த 2வது மகனை (பெயர் வெளியிடப்படவில்லை) கும்பலை சேர்ந்த ஒருவன் பிடித்துக் கொண்டான். சிறுவன் கழுத்தில் கோடாரியை வைத்து கொண்டு மிரட்டியதால், ராஜிந்தர் உள்பட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த பணத்தை கொள்ளை அடித்த பின், வெளியில் இருந்த 2 சொகுசு கார்களை எடுத்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார் ராஜிந்தர். மர்ம கும்பலை பிடிக்க உதவும்படி பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top