புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (37). குரோம்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ஜோதி
(31). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. மகள் சுமித்ரா (9), மகன் பார்த்திபன் (7) உள்ளனர். இருவரும் குரோம்பேட்டையில் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். ஜோதி விஏஓ தேர்வு எழுதியுள்ளார். தனக்கு வேலை வாங்கி தருவதற்கு ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார். அவர் இன்னும் வேலை வாங்கி தரவில்லை. இந்த விஷயம் கணவர் செந்தில்குமாருக்கு தெரியவந்தது. அவர் மனைவி ஜோதியை கண்டித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று காலையில் செந்தில்குமார் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வேலைக்கு சென்றார். மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜோதி பேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் அவரை பார்க்க வீட்டுக்கு சென்றனர். அவர்கள் கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். வீட்டுக்குள் ஜோதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் போலீசார் சென்று கதவை உடைத்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊரப்பாக்கம் விஏஓ சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top