திடீரென மனம் மாறிய காதலியை சுட்டுக் கொன்று விட்டு காதலனும் தற்கொலை செய்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூர் நகர் அருகே தவுலத்பூர்
கிலான் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (34). ஹோசியாபூரில், வெளிநாட்டு பணம் பரிமாற்றும் அலுவலகம் வைத்துள்ளார். இவரும் பண்டோரி கிராமத்தை சேர்ந்த மன்தீப் கவுர் (26) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நர்சிங் படிப்பதற்காக மன்தீப் நியூசிலாந்து சென்றார். படிப்பு முடிந்து சில தினங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். பழைய காதலோடு அவரை சந்தித்தார் பிரதீப் சிங். ‘உனக்கு படிப்பு முடிந்து விட்டதால் திருமணம் செய்து கொள்வோம்Õ என்று கூறினார்.
ஆனால், மன்தீப் அதற்கு சம்மதிக்கவில்லை. இருவரும் விலகி விடுவோம் என்பது போல பேசினார். மன்தீப்பின் இந்த மனமாற்றம், அவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த பிரதீப்புக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என எண்ணி விபரீத திட்டம் தீட்டினார். நேற்று நைசாக பேசி மன்தீப்பை தனது அலுவலகத்துக்கு வரவழைத்த பிரதீப், அவரது தலையில் சுட்டு கொன்றார். பின்னர் தானும் தலையில் சுட்டு கொண்டு தற்கொலை செய்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக