சேலம் கந்தம்பட்டியில் ஒரு ஆசிரியையின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சேட்டை செய்துள்ளார் ஒரு பிளஸ் ஒன் மாணவர். இதையடுத்து அவரை தலைமை ஆசிரியர் கண்டித்து தந்தையைக் கூட்டிக் கொண்டு வா என்று
உத்தரவிட்டார். ஆனால் அவரோ தன்னை ஆசிரியை திட்டியதாக கூறி நாடகம் போட்டார்.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் விஜயகுமார். 16 வயதான இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர் விஜயகுமார் ஒரு ஆசிரியையின் தலைமுடியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆசிரியை தலைமை ஆசிரியர் எழில் மணியிடம் புகார் கூறினார். அவர் மாணவர் விஜயகுமாரை அழைத்து நாளை உனது தந்தையை அழைத்து வா என்று கூறியுள்ளார்.
இதனால் வீட்டிற்கு வந்த மாணவர் விஜயகுமார் தன்னை தலைமை ஆசிரியர் திட்டியதால் தான் சாணி பவுடர் குடித்ததாக கூறினார். பயந்து போன பெற்றோர் விஜயக்குமாரை மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர். அங்கு நடந்த சோதனையில் அவர் எதையும் குடிக்கவில்லை என்று தெரிந்தது.
விஜயக்குமார் எப்பவுமே இப்படித்தானாம். ஏதாவது சேட்டை செய்வது, பின்னர் திட்டினால் எதையாவது எடுத்துக்குடித்து விடுவாராம். முன்பு 10ம் வகுப்பு படித்தபோது கூட பெனாயில் குடித்து விட்டாராம். சில நாட்களுக்கு முன்பு அப்பா திட்டியதால் பெயிண்ட்டில் கலக்கப் பயன்படுத்தப்படும் தின்னரை எடுத்துக்குடித்து விட்டார்.இப்போது சாணிப் பவுடரைக் குடித்ததாக நாடகமாடியுள்ளார்.
பிள்ளைளைப் பெறுவதை விட அவர்களை வளர்த்து நல்லவர்களாக ஆளாக்குவதுதான் பெரும் சிரமமாகபோய் விட்டது பெற்றோர்களுக்கு.
0 கருத்து:
கருத்துரையிடுக