புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொம்மரிலு படத்தை இயக்கிய பாஸ்கர் தெலுங்கில் புதிதாக இயக்கி உள்ள படம் "ஓன்கோல் கிட்டா". ராம் பொத்தனேனி, கீர்த்தி கஹாண்டா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று ஆந்திராவில் வெளியானது.
படத்தில் இடம்பெற்றிருந்த பிரகாஷ்ராஜின் நிர்வாணக் காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பொம்மரிலு பாஸ்கரின் படம் குடும்பபாங்கானதாக இருக்கும். இந்தப் படத்துக்கு தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் கொடுத்தது. "யூஏ" சான்றிதழாவது கொடுங்கள் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து வற்புறுத்தியும் தணிக்கை குழு மறுத்துவிட்டது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. படம் வெளிவந்த பிறகுதான் பிரகாஷ்ராஜின் நிர்வாண காட்சி உள்ளிட்ட சில காட்சிகளுக்காகத்தான் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதுவரை ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயம் பட ரிலீசுக்கு பிறகு வெளியே தெரிந்திருக்கிறது.

 
"கதைக்கு மிகவும் அவசியம் என்பதால்தான் பிரகாஷ்ராஜ் நிர்வாணமாக நடித்தார். இருந்தும் அந்தக் காட்சியை மங்கலாகத்தான் காட்டுகிறோம். அந்தக் காட்சியை நீக்கினால் யுஏ தருகிறோம் என்று சென்சார் போர்டில் சொன்னார்கள். கதைக்கு அது தேவை என்று நாங்கள் மறுத்ததால் ஏ கொடுத்தார்கள். தமிழில் கமல், சரத்குமார் போன்றவர்கள் நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை" என்று படத்தரப்பு கூறுகிறது. என்றாலும் பிரகாஷ்ராஜின் நிர்வாணக் காட்சி ஆந்திரத்தை கலங்கடித்திருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top