புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் இரவு தனது வீட்டில் தனிமையில் இருந்த மன வளர்ச்சி குன்றிய இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்திய சிறிய தந்தை
முறையிலான ஒருவர் விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை குறித்த இளம் பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அன்று இரவு அவரது வீட்டிற்குச் சென்ற அவருடைய சிறிய தந்தையான 47 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் குறித்த மனவளர்ச்சி குன்றிய பெண்னை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் தனது தாய்க்கு சம்பவத்தை தெரியப்படுத்திய பின்னர் விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குறித்த பெண்ணின் சிறிய தந்தையினால் குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (01) விடத்தல் தீவு பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top