புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்யமுற்பட்ட பிரஸ்தா சிறுமிகளின் தந்தைக்கு ஐந்து வருடத்துக்கு
ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறை விதித்துத் தீர்ப்பளித்தது நீதி மன்று.
யாழ்.மேல் நீதிமன்றில் ஆணையாளர் ஜே.விஸ்வ நாதன் முன்னிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 2006 2007 காலப்பகுதியில் பதின்மவயதுடைய இரண்டு சிறுமிகளையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார் அவர்களது தந்தை. அவர் சுன்னாகத்தைச் சேர்ந்தவர்.

சம்பவம் தொடர்பில் சுன் னாகம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரின் தந்தையைக் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப் பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு யாழ்.மேல் நீதிமன் றுக்குப் பாரப்படுத்தப்பட்டு யாழ்.மேல்நீதிமன்றில் விசா ரணை நடைபெற்றது. அதன்போது குறித்த தந்தை தன்மீதான குற் றத்தை ஒப்புக்கொண்டார்.

இதன்போது குற்றத்துக்காக 5 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் அதனை சிறுவர் இல்லத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள அவரது சிறுமிகளுக்காக அந்த இல்லத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதி மன்று உத்தரவிட்டது.

தவிர ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட காலச் சிறைத் தண்டனையும் விதித்தது நீதிமன்று.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top