பொலிஸில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் தான் தப்பியமை குறித்து கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
28 வயதுடைய அண்டனி பேன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சொந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் தேவை என குறிப்பிட்டும் பொலிஸார் தேடுவதாகவும் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
இவரது பேஸ்புக் கணக்கு குறித்த விபரங்கள் உள்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பின்னதாக அவர் தனது பேஸ்புக் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். எனினும் இவரது புகைப்படம் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் 103நபர்களில் ஒருவராக பொலிஸ் இணையத்தளத்தில் இருந்தது. இதனைக் கொண்டு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லும் வேளையில் தப்பிச் சென்றார். இந்நிலையில் தனது பேஸ்புக் கணக்கில் தினமும் தனது நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இருப்பிடம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
எனினும் இரண்டு மாதங்களாக சந்தேகநபரை தேடி அவரது வசிப்பிட பகுதிகளுக்கு சென்றிருந்தாலும் சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் பேஸ்புக் இணைய தகவல்களை ஆராய்த பொலிஸார் நேற்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக