புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட சீனிவாசராவ்-ராஜேஸ்வரி தம்பதி வேலைக்காக திருச்செங்கோட்டுக்கு வந்தனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சீனிவாசராவுக்கு சந்திரசேகரராவ் (25), பவன்குமார் (20) என்ற இருமகன்கள். இருவரையும் என்ஜினீயராக்க
ஆசைப்பட்டார்கள்.

சந்திரசேகரராவ் ஈரோட்டில் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தார். பார்ப்பதற்கு ஆணழகனாக காட்சியளித்த சந்திரசேகரராவை சக மாணவ, மாணவிகள் பொறமையுடன் பார்த்தனர். படிப்பில் மட்டுமல்லாது கல்லூரி கலை விழாக்களில் நடிப்பிலும் அசத்திய சந்திரசேகரராவை ‘மச்சி பின்னிட்டேடா, என்று புகழ்ந்து தள்ளினார்கள். சிலர் டேய், மச்சி நீ மட்டும் சினிமாவுக்கு போனால் ஹீரோ தான்டா என்று மனதில் பட்டதை நேரடியாக சொன்னார்கள்.

ஏற்கனவே நடிப்பில் ஆர்வம் இருந்த சந்திரசேகரராவுக்கு நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பெயருக்கு பின்னால் என்ஜினீயர் என்ற பட்டத்தை போடுவதை விட ‘நடிகர்’ என்ற பட்டத்தையே விரும்பினார். சினிமாவை மானசீகமாக காதலித்தார். என்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் சினிமா காதலியை தேடி சென்னைக்கு சென்றார்.

அழகான தோற்றம் இருக்கு, நடிப்பில் திறமை இருக்கு. எப்படியும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசை கனவுகளுடன் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கினார். ஆனால் சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே மிச்சம். இருந்தாலும் மனம் தளராமல் சென்னையில் தங்கி இருந்து வாய்ப்புகளை தேடி ஆலைந்தார்.

முன்னணி கதாநாயர்கள், கதாநாயகிகள், சினிமா தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து தனது நடிப்பு ஆசையை கூறினார். ஒவ்வொருவரோடும் படம் எடுத்து கொண்டதோடு சரி, பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. பல நடிகர், நடிகைகளோடு எடுத்த படங்களை பேஸ்புக்கில் போட்டார். அதை பார்த்த நண்பர்கள் பாராட்டினார்கள். தைரியமாக இரு. உனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நாட்கள், மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி 3 வருடங்கள் உருண்டோடி விட்டன.

இந்த நிலையில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்வில் இனி வசந்த காலம்தான் என்று பொன் வசந்தத்தில் சிறு காட்சியில் நடித்து மெய்சிலிர்த்தார்.

இதே போல் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் ஆயிரம் நாட்களுக்கு மேல் வீணாய் அலைந்தாலும் நாமும் ஒரு நாள் இதே சென்னையில் பெரிய நடிகராய் வலம் வரலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தின் பெயரை கேட்டதும் சந்திரசேகரராவுக்கும் நம்பிக்கை துளிர்விட்டது, அந்த படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களில் நடித்தது பற்றி நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.

படங்களும் குறிப்பிட்ட நாளில் வெளிவந்தது. நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து படத்தை பார்க்கும்படி கூறினார். தான் நடித்த காட்சிகளை பார்க்க சந்திரசேகரராவும் திரைக்கு முன்னாள் சந்தோஷமாக உட்கார்ந்தார். ரசிகர்களின் கரகோஷத்தோடு வெண்திரையில் படம் ஓடியது. ஆனால் சந்திரசேகரராவ் நடித்த காட்சிகள் மட்டும் இல்லை.

இரண்டு படங்களிலும் தனது காட்சிகள் இடம் பெறாததால் சந்திரசேகரராவ் நொறுங்கி போனார். தனது சினிமா கனவு கலைந்து போனதை நினைத்து கலங்கி போன மகனுக்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்கள். இன்னும் உனக்கு பெரிய வாய்ப்புகள் வரும் உன்னாள் சாதிக்க முடியும் என்று தேற்றினார்கள். யாருடைய ஆறுதல் வார்த்தைகளாலும் சந்திரசேகரராவ் சமாதானம் அடையவில்லை. மனதுக்குள் நொறுங்கி போன சந்திரசேகரராவ் தனது வாழ்கை கதையை முடிக்க முடிவு செய்து விட்டார்.

நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சந்திரசேகரராவின் பெற்றோர் ஜதராபாத் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகரராவ் ஒரு நைலான் கயிற்றில் முடிச்சு போட்டு தன் கதையை முடித்து கொண்டார். நேற்று போனில் தொடர்பு கொண்ட பலர் சந்திரசேகரராவ் போனை எடுக்காததால் அவரது தம்பிக்கு போன் செய்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரசேகரராவ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

சினிமா கனவுகளை சுமந்த உடல் வெற்றுடலாய் திருச்செங்கோடு ஆஸ்பத்திரி பிணவரையில் கிடக்கிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top