இந்தியாவில் கத்தி முனையில் 10 வயதுச் சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவர்!
போரூரில் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை கத்தி முனையில் கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா என்பவரின் தங்கை மாலா(10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய், தந்தை இல்லாத அவர்கள் போரூரில் உள்ள லட்சுமி நகரில் வசித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்து தங்கையை படிக்க வைத்து வருகிறார் விஜயா. மாலா பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு மாடியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக மணல், ஜல்லி என்று கட்டுமானப் பொருட்கள் வந்து இறங்கின. நேற்று காலை விஜயா வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
அப்போது மாலா மட்டும் வீட்டில் இருந்தார். அந்நேரம் கட்டுமானப் பொருட்களை ஏற்றிக் கொண்டு லோடு ஆட்டோ டிரைவர் மதுரவாயலைச் சேர்ந்த மகாதேவன்(34) அங்கு வந்தார். பொருட்களை இறக்கி வைக்கையில் அவர் மாலா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு சிறுமியிடம் நைசாகப் பேசினார்.
அவர் சிறுமியிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார். மாலா வீட்டுக்குள் சென்றபோது அவர் உள்ளே சென்று கதவை பூட்டினார். பின்னர் கத்தி முனையில் மாலாவை கற்பழித்தார்.
இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டுச் சென்றார். மாலை வீடு திரும்பிய விஜயா தனது தங்கை அழுது கொண்டிருப்பதைப் பார்த்து காரணம் கேட்டார்.
அப்போது தான் மாலா கற்பழிக்கப்பட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மகாதேவனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
0 கருத்து:
கருத்துரையிடுக