புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரசவத்திற்காக காரில் சென்ற தாயுடன் தந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்த, பின்னர் பிறந்த ஆண் குழந்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வாழும் 21 வயது இளம்தம்பதியர், தங்களின் தலைமகன் பிறக்கப்போகும் இனிய நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.

தாய்மையடைந்த பெண்ணிற்கு பிரசவ வலி எடுக்கவே ஒரு டாக்சியில் அவரை ஏற்றிக்கொண்ட கணவர், புரூக்ளினில் உள்ள வைத்தியசாலையை நெருங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, எதிர் திசையில் வந்த கார், டாக்சியில் மோதி பாரிய விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் தம்பதியரையும், டாக்சி டிரைவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வரும் வழியிலேயே தம்பதியரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறிய வைத்தியர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் ஆபரேஷன் செய்து உள்ளேயிருந்த அழகான ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கதகதப்பிற்காக இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த டாக்சி டரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்சி மீது மோதிய காரின் டிரைவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top