திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையனின் மகன் மாதவன் (20).
லாரி டிரைவரான மாதவன். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்த, மகேந்திரனின் மகள் சங்கரியை (19) காதலித்துள்ளார்.
சங்கரி மன்னார் குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரியின் அக்கா கணவரின் தம்பி தான் மாதவன்.
இதனால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது தான் சங்கரியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது. கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தெய்வானை திருக்களர் பொலிசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், சப் - இன்ஸ்பெக்டர் வேத மூர்த்தி மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல் ஜோடி பிணங்களை மீட்டு மன்னார்குடி அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார் குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக