கொலிவுட் நடிகையான அசின் அமெரிக்க வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விரைவில் அவரை மணக்க உள்ளதால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும்
பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் அசின், கடந்த 2 வருடங்களுக்கு முன் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார்.
ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல நடிகர்களுடன் 6 படங்களில் நடித்தார். இதில் 4 படங்கள் 100 கோடி வசூலை ஈட்டியது. இதையடுத்து அசினுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சமீபகாலமாக அசின் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தவிர்த்து வருவது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிக்கிறார். அவரை மணக்க திட்டமிட்டுள்ளதால்தான் புதிய படங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அசின் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் 100 கோடி வசூல் படத்தில் நான் இருப்பது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.
ஆனால் அதைவிட இன்னும் நிறைய என் வாழ்வில் செய்ய வேண்டி இருக்கிறது. ரூ. 100 கோடி பட்டியலில் இடம் பிடித்திருப்பது அதிர்ஷ்டம் என்று என்னைப்பற்றி கூறுவதை கேட்டால் தமாஷாக இருக்கிறது.
என்னை பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக சமீபத்தில் பள்ளி தோழியுடன் அமெரிக்கா சென்று எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன்.
இனி படங்களில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே ஏற்பது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பாலிவுட்டில் கூறும்போது, கடந்த சில மாதங்களில் அசின் பல முறை அமெரிக்கா சென்றிருந்தார்.
அப்போது காதலனுடன் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. சீக்கிரமே திருமண ஏற்பாடுகள் நடைபெற உள்ளதால் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக