இந்தியாவில் மணிக்கட்டை வெட்டி படம் எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு தற்கொலை செய்த வாலிபர்
கோவாவில் நடுரோட்டில் திடீரென மணிக்கட்டில் வெட்டிக் கொண்ட வாலிபர் ஒருவர் அதை படம் பிடித்து பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். பின்னர் அப்படியே ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து
விட்டார்.
பனாஜியில் ஜுவாரி பாலம் உள்ளது. இதன் கீழே ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த பாலத்துக்கு பைக்கில் வேகமாக வந்து 26 வயது வாலிபர் ஒருவர் இறங்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் கை மணிக்கட்டில் ஆவேசமாக வெட்டி கொண்டார்.
இதையடுத்து மணிக்கட்டிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனடியாக அதைதனது செல்போனில் படம் பிடித்த அவர் பின்னர் அதை தனது பேஸ்புத்தகத்தில் அப்லோட் செய்தார்.
வாலிபரின் இந்த செயலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திகைத்தனர். அடுத்த அதி்ர்ச்சியாக அந்த நபர் ஆற்றில் குதித்து விட்டார்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த நபர் சிக்கவில்லை. இரவில் உடல்தான் கிடைத்தது.
ஒரு தலைக் காதல் அல்லது காதல் தோல்வியால் இந்த விபரீதத்தில் அந்த வாலிபர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக