கோண்டாவிலில் இன்று இரவு இடம்பெற்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி 100 மீற்றர் தூரத்திலேயே இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கோண்டாவில் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.
எனினும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததுடன் அதிகரித்த வேகத்துடனும் வந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இதில் முச்சக்கர வண்டியில் வந்த மூவருமாக ஐவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் அதிக சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக