புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொகைடோ தீவில் கடுமையான பனிப்புயல் விசியது. இதனால் சில பகுதிகளில் 2 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான பனி மூடியிருந்தது. கிழக்கு ஹொகைடோ நகாஷிபெட்சு நகரில் ஒரு காரில் 40 வயது பெண் ஒருவரும்
அவரது 3 இளம் வயது குழந்தைகளும் இறந்து கிடந்தனர். பனியால் காரின் புகைப்போக்கி மூடப்பட்டதால் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்து இவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு 23 வயது பெண்ணும் இதே நகரில் பனியில் உறைந்து இறந்து கிடந்தார்.

நகாஷிபெட்சு நகரின் வடமேற்கே உள்ள யுபெட்சு பகுதியில் வயலுக்கு சென்ற 53 வயது தந்தை பனி மூடிய நிலையில் தனது 9 வயது மகளை அணைத்தபடி இறந்துகிடந்தார். தந்தையின் அரவணைப்பில் இருந்த சிறுமி உயிர் பிழைத்தார். முன்னதாக, எரிமோ கேப், ஹொகைடோ பகுதிகளில் 135 கி.மீ. வேகத்தில் பனிப்புயல் வீசும் என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top