அமெரிக்காவில் காதலனின் உயிரணுவை திருடி குழந்தை பெற்ற காதலி
அமெரிக்காவில் உள்ள லூசியானாவை சேர்ந்தவர் லேனிஹார்டின். இவர் டோபி டேவல் என்ற பெண்ணை காதலித்தார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் டேவலுக்கு தற்போது 2 வயதில் மகன் இருக்கிறான். அவன் முன்னாள் காதலன் ஹார்டினின் குழந்தை என சமீபத்தில் தெரியவந்தது. ஹார்டின் தனது உயிரணுவை விந்து வங்கியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதை திருடி சோதனை குழாய் முறையில் டேவல் குழந்தை பெற்று உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால் ஆத்திரம் அடைந்த ஹார்டின் தனது முன்னாள் காதலி டேவல் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது உயிரணுவை திருடி அனுமதியின்றி குழந்தை பெற்று இருக்கிறார். அதற்காக அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விந்து வங்கி மற்றும் செயற்கை கருத்தரிப்பு மையம் மீதும் கோர்ட்டில் புகார் செய்தார். தற்போது இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே அனுமதியின்றி தனது உயிரணு மூலம் குழந்தை பெற்ற டேவலிடம் ஹார்டின் நஷ்டஈடு கேட்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக