பதுளையில் 15 வயது சிறுவனை அடித்தே கொலை செய்த சித்தப்பா
பதுளை பொலிஸ் பிரிவில் ஹாலிஎல ரொக்கதென்ன தோட்டத்தில் மகன் முறையான சிறுவனை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அச் சிறுவன் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டதனால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படார்.
இந்நிலையில் சிறுவன் இன்று (05) உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உட்பட்ட பாடசாலை மாணவன் ஹாலிஎல தமிழ் வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி கற்கும் ரொக்கதென்ன தோட்டத்தைச் சேர்ந்த மனோகரன் கலைதீபன் என தெரியவந்துள்ளது.
15 வயதுடைய சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த மாணவனின் சித்தப்பாவான பழனி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக