புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்ஸ் நாட்டில் குடிப்பழக்கம் காரணமாக நாள் ஒன்றுக்கு 134 பேர் உயிரிழப்பதாக பாரிஸ் அருகேயுள்ள குஸ்தாவே ரூஸி(Gustave Roussy) கல்லூரியில் உள்ள உயிரிஅளவையியல் மற்றும்
உயிர்கொல்லி நோயியலுக்கான சேவை மையம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான கேத்தரீன் ஹில் கூறுகையில், பிரெஞ்சுக்காரர்கள் அளவுக்கு அதிகமாக குடிக்கின்றனர் என்றும் ஒவ்வொரு வருடமும் சுமார் 49,000 பேர் குடி தொடர்பான நோய்களால் மரணமடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு குடிப்பழக்கத்தால் மரணமடைந்தவர்களில் ஆண்களின் மொத்த எண்ணிக்கை 13 சதவிகிதம் பேர்கள் என்றும் பெண்களில் எண்ணிக்கை 5 சதவிகிதம் பேர்கள் மட்டுமே என்று வரையறுத்துள்ளார்.

மேலும் குடிப்பழக்கத்தால் இறந்தவர்களில் 15-34 வயதுக்குள் இருப்பவர்கள் 22 சதவிகிதம் பேர்களும், 35-64 வயதுக்குள் மரணமடைந்தவர்கள் 18 சதவிகிதம் பேர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவிகிதம் பேர்களும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் ஒரு நாளைக்கு 3.3 அலகு மது மட்டுமே அருந்தினார்கள். கடந்த 2002 முதல் 2003ம் ஆண்டு வரை 3 அலகாகக் குறைந்து கடந்த 2009ம் ஆண்டு 2.9ஆக மிக மிக குறைந்துவிட்டது. ஆனால் 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாகக் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சுவிட்சர்லாந்தில் குடிப்பழக்கத்தால் இறக்கும் ஆண்கள் 5 சதவிகிதம் பேர்கள் மட்டுமே என்றும் டென்மார்க்கில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே குடிப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top