புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மது அரக்கன் எந்தஅளவுக்கு மனிதர்களை தின்று தீர்க்கிறான் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு விபரீத உதாரணம். கேரளாவில் மது போதையில், என்ன செய்கிறோம் என்று தெரியாமல், தனது பேத்தியை தீவைத்து எரித்து விட்டார் ஒரு மூதாட்டி.
குமுளியைச் சேர்ந்தவர் செல்வன். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்று வருகிறார்.

இவர் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வசித்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் மனைவிக்குப் பிறந்த 13 வயதான தேவி என்ற செல்வனின் மகள், தனது பாட்டி பவானி வீட்டுக்குப் போய் படித்து வந்தார். 62 வயதாகும் பவானி, குடிக்கு அடிமையானவர். தினசரி குடிப்பாராம்.

குடித்து விட்டால் கண் மண் தெரியாமல் பேத்தியை அடித்து விடுவாராம். 2 நாட்களுக்கு முன்பும் இப்படித்தான் போதையில் பேத்தியைப் போட்டு அடித்துள்ளார். பின்னர் தேவி தூங்கப் போய் விட்டார். அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பேத்தி மீது ஊற்றி தீவைத்து விட்டார். தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தேவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்டி பவானியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top