கனடாவில் இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
கனடா இணையதள பயன்பாட்டில் முதலிடத்திலிருந்து இறங்கி விட்டதாக ComScore ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சராசரியாக ஒருவர் மாதத்துக்கு 41.3 மணிநேரங்களும், கடந்த 2011ம் ஆண்டு 45.3 மணிநேரமும், 2010 ம் ஆண்டு 43.5 மணிநேரமும் இணையதளத் தொடர்பில் இருந்துள்ளனர்.
கனடாவில் உள்ள 25.5 மில்லியன் இணையதள பயனாளிகளும் தினந்தோறும் இணையதளத் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் 50 சதவிகிதம் பேர் மட்டுமே மாதந்தோறும் பயன்படுத்துவதால் இரண்டாம் இடம் வகிக்கின்றனர்.
ஆனால் அமெரிக்காவினர் தற்பொழுது மாதத்துக்கு 43 மணிநேரம் இணையதளத் தொடர்பில் இருப்பதால் முதலிடம் வகிக்கின்றனர்.
அலைபேசிப் பயன்பாட்டில் கனடா 10 சதவிகிதம் வளர்ந்துள்ளது மற்றும் திறன் பேசிகளைப்(smartphone) பயன்படுத்துவோர் எண்ணிக்கை 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கூகுள் ஆண்ட்ராய்டு நிறுவனத்தில் திறன்பேசி(smartphone) 40 சதவிகிதம், அப்பிள் தயாரிப்புகள் 35 சதவிகிதம், மோஷன் திறன்பேசி(smartphone) 20 சதவிகிதம், மைக்ரோசாஃப்ட் மற்றும் சிம்பியன் தயாரிப்புகள் 2 சதவிகிதம் என்று விற்கப்பட்டுள்ளது.
சமூகவலையத்தளத்தைப் பொறுத்தவரையில் பேஸ்புக்கையே அதிகமானோர் நாடுகின்றனர். இதற்கடுத்த இடத்தில் டிவிட்டரும் பின்னர் லிங்க்ட்டும் உள்ளது.
கடந்த ஆண்டு திறன்பேசியாளர்களில்(smartphone) 33 சதவிகிதம் பேர்கள் வங்கி நடவடிக்கைகளுக்கு இணையதளம் வழியாக செயல்பட்டனர். கடந்த 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 29 சதவிகிதம் ஆகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக