பஞ்சாபில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான இளம் பெண் ஒருவரை அப்பகுதி பொலிசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பஞ்சாபில் டரன் டரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், பொலிஸாரோ குடிபோதையில் இருந்த ஆசாமியிடம் இலஞ்சம் வாங்கிகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணையும் அப்பெண்ணின் குடும்பத்தாரையும் அடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நடு வீதியில் நடந்த இந்த கொடூரத்தை வழிபோக்கர் ஒருவர் தனது மொபைல் போனில் படமெடுத்து வெளியிட்டார். இதனை தொடர்ந்து இளம் பெண்ணை நாடு வீதியில் வைத்து தாக்கிய பொலிசார் இருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக