புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.


கறுவப்பங்கேணி பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்திலே தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கறுவப்பங்கேணியை சேர்ந்த வெ.ஜேசு (31வயது) என்பவரே பாய்ந்து தற்கொலைசெய்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top