ஐரோப்பாவில் மனங்கவர்ந்த சுற்றுலாத்தலம் ஜேர்மனி
ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாக ஜேர்மனி புகழ் பெற்றுள்ளது.
இது குறித்து ITB சுற்றுலாத் திருவிழாவில் சுற்றுலா நிபுணர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு ஜேர்மனிக்கு ஒருநாள் வருகை தந்தவர்கள் 407.3 மில்லியன் என்றும் ஸ்பெயினுக்கு வந்தவர்கள் 383.7 மில்லியன் மற்றும் இத்தாலி நாட்டுக்கு வந்தவர்கள் 376.6 மில்லியன் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஜேர்மனி சுற்றுலாக்கழகம் கூறுகையில், கடந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை 3.6 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் இதனால் 14 மில்லியன் பேர் கூடுதலாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு போய் வரும் ஜேர்மானியர் எண்ணிக்கை 2.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் வெளிநாட்டிலிருந்து ஜேர்மனிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை 8.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக