புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் லொறி ஒன்றின் கீழ் சிக்குண்டு நான்கு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


இச் சம்பவம் நேற்று (31) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் சாரதி, லொறியை தனது விட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிலுள்ள 16 வயதான சிறுவன் ஒருவர் லொறிறை துடைத்து சுத்தம் செய்யது லொறியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அயல் வீட்டிலுள்ள குழந்தை ஒன்று லொறியினுள் சிக்குண்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அக்குழந்தை மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை இன்று (01) மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

சந்கேநபரான 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top