கொலிவுட்டில் ‘3’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘உண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் எதிர்நீச்சல்.
இப்படத்தில் ‘மெரீனா’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘கேடி பில்லா கில்லா ரங்கா’ ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும், அட்டகத்தி நந்திதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
‘கொலவெறி’ பாடல் புகழ் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ், தாமரை, கார்க்கி, வாலி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
தான் நடிக்காத, வேறு கதாநாயகன் நடிக்கும் படத்துக்கு தனுஷ் பாடல் எழுதுவது இதுவே முதன்முறை.
பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த துரைசெந்தில்குமார் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
தனுஷ் இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு பாடல் காட்சியிலும் ஆடிப் பாடியிருக்கிறார். இம்மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக