இந்தியா-வள்ளியூர் அருகே காதல் விவகாரத்தில் 2 கிராமத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், பைக்குகள் மற்றும் டிஎஸ்பி கார் அடித்து நொறுக்கப்பட்டன. 12 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர், பெண்கள் உட்பட 25 பேரை
போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தெற்குவள்ளியூர் அருகே அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அ.திருமலாபுரம் வாலிபர் காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஊருக்குள் அடிக்கடி பைக்கில் வந்துபோன அவரை அழகப்பபுரம் முதியவர் தட்டிக்கேட்க, பைக்கில் வந்த 2 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதனால் இரு கிராமத்தினருக்கும் கடந்த 26-ம் தேதி தகராறு ஏற்பட்டது.
ஊர் பெரியவர்கள் பேசி பிரச்னையை முடித்தனர். இந்நிலையில், அ.திருமலா புரத்தை சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் அரிவாள், ஈட்டி, கம்பு போன்ற ஆயுதங்களுடன் நேற்று காலை அழகப்பபுரம் சென்றது.
அங்கு பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கணேசன், அவரது மனைவி லீலாவதி (40), மகன் சுரேஷ் (19) மற்றும் பால்கனி (70) ஆகியோரை தாக்கினர். அருகே உள்ள வீடுகளின் கதவு, ஜன்னல்கள், 4 பைக்குகளையும் கும்பல் அடித்து நொறுக்கியது.
ஒரு வீட்டில் புகுந்து பீரோ, சேர் ஆகியவற்றை அடித்து உடைத்து வீட்டை சூறையாடினர். ஒரு வீட்டில் கட்டி போடப்பட்டிருந்த நாயை வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து பணகுடி போலீசில் அழகப்பபுரம் மக்கள் புகார் செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக