இணைய உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் வழங்கிவரும் சேவைகளுள் Google Translate சேவையும் அடங்கும்.
பல்வேறு மொழிகளுக்கான இச்சேவையினை இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியுமாயினும் தற்போது அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவதற்கான மொழிகளுக்கான பொதி (Language Packages) வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது அன்ரோயிட் சாதனங்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன் ஒன்றில் 50 வரையான பல்வேறு மொழிகளுக்கான பொதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவற்றினை இணைய இணைப்பு அற்ற சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனானது அன்ரோயிட் 2.3 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி
0 கருத்து:
கருத்துரையிடுக