யாழில் மதுபோதையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அராலி வடக்கு செட்டியா மடத்தடியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழில் நேற்று (31) அன்று பிரபல மது விற்பனை நிலையத்தில் இரு இளைஞர் குழுக்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
போதை கூடியதும் பலம்மிக்கவர்கள் யார் என்பதை பார்க்க கையை மடித்து போட்டி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஏற்பட்ட குழப்பத்தினாலேயே இரு குழுக்களும் மோதிக் கொண்டன.
இதன்போது தலை, நெஞ்சு மற்றும் கன்னப் பகுதிகளில் ஒருவருக்கு கடி காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு பழி தீர்க்கும் வகையில் அந்நபர் மற்றொருவரின் காதைகடித்து காயப்படுத்தியும் உள்ளார்கள்.
காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக