இந்தியா -ஒரிசா மாநிலத்தில் ஷூ வாங்க பணம் கொடுக்காத தாயைக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ஒரிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டம், ரூர்கெலாவில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்(24). அவருக்கு குடி பழக்கம் உள்ளது. அவர் மது அருந்த தனது தாய் சல்மி லாக்ராவிடம்(46) அடிக்கடி பணம் கேட்பார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஷூ வாங்க ரூ.200 பணம் கொடுக்குமாறு தனது தாயிடம் சஞ்சய் கேட்டுள்ளார்.
ஆனால் சல்மி பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் ஒரு கல்லை எடுத்து தனது தாயை அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து சஞ்சய்யின் தந்தை உதித் நகர் காவல் நிலையத்தில் மறுநாள் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சஞ்சய்யை கைது செய்தனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடியானதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக