இந்தியா-ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஆச்சம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (30), கால்நடை துறை மருத்துவமனை உதவியாளர். இவருக்கு அதே ஊரை சேர்ந்த கணவனை இழந்த பெண் மற்றும் அவரது 2 மகள்களுடன் கள்ளத்தொடர்பு
இருந்ததாக தெரிகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த பெண்ணின் மூத்த மகளுக்கும் அதே ஊரை சேர்ந்த கோழிக்கறி வியாபாரி ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் தனது மனைவி, மாமியார், மைத்துனி ஆகிய 3 பேருடன் ராமகிருஷ்ணா கள்ளத்தொடர்பு வைத்திருந்த விஷயம் ரமேசுக்கு தெரிய வந்தது.
ஆத்திரம் அடைந்த ரமேஷ், கடந்த 15/7/2012ம் ஆண்டு ராமகிருஷ்ணாவிடம் நைசாக பேசி பைக்கில் அழைத்து கொண்டு தாடேபள்ளிக்கூடம் என்ற இடத்துக்கு சென்றார். வழியில், கறிக்கடைக்கு 2 கத்திகள் தேவை என கூறி ஒரு கடையில் 2 கத்திகள் வாங்கினார். ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் மது குடித்துள்ளனர்.
அப்போது கள்ளத்தொடர்பு குறித்து இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்து ராமகிருஷ்ணாவின் தலையை கத்தியால் வெட்டி துண்டாக்கி கொலை செய்தார் ரமேஷ். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி தலையை எரித்தார்.
அதன் பின்னர் உடலை 11 துண்டுகளாக வெட்டி 2 பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டார். ரயிலில் விசாகப்பட்டினத்துக்கு சென்றார். அங்கு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் உடலை வீசிவிட்டு தப்பி சென்றார்.
அனாதையாக கிடந்த 2 மூட்டைகளில் தலையில்லாத உடல் துண்டு துண்டாக கிடப்பதை பார்த்து ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தலை இல்லாததால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், இறந்தவரின் கட்டை விரல் ரேகையை பதிவு செய்து அருகில் உள்ள மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்தனர்.
பின்னர் ஆதார் அட்டை அடிப்படையில் இவரது விரல் ரேகைகளை ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இறந்தவர் ராமகிருஷ்ணா என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ரமேஷை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக